Breaking News

திமுக உட்கட்சி தேர்தல்...!

சென்னை:  

கிளைக்கழகம், நகரம், ஒன்றியம், பகுதி மாவட்ட அளவில் தேர்தல் நடத்தி 5 ஆண்டுகள் ஆகிவிட்டதால் தேர்தல் கமி‌ஷன் விதிப்படி வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் கட்சி தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.



தி.மு.க. உட்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். 2015-ம் ஆண்டு நடைபெற்ற உட்கட்சி தேர்தல் வரை தொடர்ந்து   தி.மு.க.   தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவர் உடல் நலக்குறைவு காரணமாக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார். அதன்பிறகு நடைபெற்ற பொதுக்குழுவில் முறைப்படி   தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கிளைக்கழகம், நகரம், ஒன்றியம், பகுதி மாவட்ட அளவில் தேர்தல் நடத்தி 5 ஆண்டுகள் ஆகிவிட்டதால் தேர்தல் கமி‌ஷன் விதிப்படி வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் கட்சி தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.  

இதையொட்டி தி.மு.க.வில் கிளைக்கழகம் அளவில் தற்போது தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.   அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நகரம், ஒன்றியம், பேரூர் கழகத்துக்கு தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த தேர்தல் இன்னும் ஒரு மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட உள்ளதாக கட்சியின் நிர்வாகி தெரிவித்தார்.  இந்த தேர்தல் முடிந்ததும் வட்ட கழக, பகுதி கழக தேர்தல் நடத்தப்பட்டு அதன்பிறகு மாவட்டக் கழக செயலாளர்களுக்கு தேர்தல் நடைபெறும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதும் தலைமைக்கு தேர்தல் நடத்தப்படும். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கை குழுவுக்கு தேர்தல் நடத்தப்படும்போது மீண்டும் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

டிசம்பர் மாதத்திற்குள் கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதால் தேர்தல் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments