Breaking News

மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார் ரஜினி

சென்னை:

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.


நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின் சில நாட்கள் ஓய்வெடுத்து வந்த ரஜினிகாந்த், அவ்வப்போது அங்குள்ள ரசிகர்களையும் சந்தித்து வந்தார். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார். இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்தது என தெரிவித்தார்.

அடுத்தபடியாக நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த வாரத்தில் டப்பிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments