Breaking News

கல்வி தொலைக்காட்சியில் சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது

சென்னை:

அரசுப் பள்ளிகளில் பட்டியலின மாணவர்களை அதிக அளவில் சேர்க்கும் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களுக்கு வகுப்புக்கள் கல்வித் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் பலர் வேலையிழந்துள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு  ஊதியக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்பிற்கு மட்டும் 75 சதவிகிதக் கல்வி கட்டணம் செலுத்த வேண்டுமா? என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து பல பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில்,  அரசுப் பள்ளிகளில் பட்டியலின மாணவர்களை அதிக அளவில் சேர்க்கும் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சியின் மூலம் மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments