தடுப்பூசி போடுகிறவருக்கு 100 டாலர்கள் பரிசு..! - நியுயார்க் மேயர் அதிரடி அறிவிப்பு
நியுயார்க் :
நியுயார்க்கில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் டெல்டா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முகக்கவசம் அணியும் படி அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்தார். தடுப்பூசிகள் இயக்கத்தை வேகப்படுத்தவும் ஜோ பைடன் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக நியுயார்க் நகரவாசிகளுக்குத் தடுப்பூசி போட்டால் 100 டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 66 சதவீதம் பேர் இரண்டு தடுப்பூசிகளும் 71 சதவீதம் பேர் ஒரு தடுப்பூசியும் போட்டுக் கொண்டிருப்பதாக நியுயார்க் நகர மேயர் டெ பிளாசியோ தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments