Breaking News

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்

கடலூர்:

கடலூர் மாவட்டம்,  வேப்பூர் அருகிலுள்ள கண்டபங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும்,  அதை கட்டுபடுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது 

ஆர்பாட்டத்திற்கு புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி வேப்பூர் வட்ட தலைவர் மணிவேல் தலைமை தாங்கினார் வட்டக்குழு உறுப்பினர் ராமு முன்னிலை வகித்தார்

கடலூர் மாவட்ட செயலாளர் கோகுல கிறிஸ்டீபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,  பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டு கொள்ளாமலும்,  விலை உயர்வை கட்டுபடுத்தாத மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டார்

இந்த ஆர்பாட்டத்தில் வட்ட குழு நிர்வாகிகள் வடிவேல், சீனிவாசன், செந்தில்குமார் ஊள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments