ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க ஆய்வு
வேலூர்:
தமிழ் வளர்ச்சித் துறையால் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் ஓர் ஆண்டு முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தமிழில் அதிக ஆர்வமுடனும், ஈடுபாட்டோடும் செயல்படும் அலுவலகத்தை தெரிவு செய்து அவ்வலுவகத்திற்கு கேடயமும், சான்றிதழும் வழங்கப்பெறுகின்றன.
அவ்வகையில் 2018ஆம் ஆண்டு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமாக “மண்டல நகராட்சி அலுவலகம் எண் - 2 வேலூர் - 9 மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகமாக “சார்பதிவாளர் அலுவலகம் ஆற்காடு” ஆகிய அலுவலகங்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
மேலும் 2019 ஆம் ஆண்டில் தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் திருமதி தே. புவனேஸ்வரி (உதவியாளர் சிறுசேமிப்பு பிரிவு) அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000/-க்கான காசோலையும், திரு, மு. கோபி (உதவியாளர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்) அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.2000/-க்கான காசோலையும், திரு. இரா. ராஜகோபால் (உதவியாளர் மாவட்டக் கல்வி அலுவலகம்) அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.1000/-க்கான காசோலையும், வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்களால் இன்று 07.07.2021 வழங்கி சிறப்பிக்கப் பெற்றது. இவ்விழா தொடர்பான பணிகளை வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் திருமதி ப. இராஜேசுவரி அவர்கள் மேற்கொண்டார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.
No comments
Thank you for your comments