கன்னியாகுமரியில் கடல் சீற்றம்..!
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரைக்கு திரும்பினார்கள்.
நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரியில் மழை பெய்ய தொடங்கியது. அந்த மழை விடிய-விடிய தொடர்ந்து நீடித்தது. இந்நிலையில், கன்னியாகுமரியில் நேற்றும் கடல் சீற்றமாக காணப்பட்டது. கடலில் அலை பல அடி உயரத்துக்கு எழுந்து வந்து, பாறைகளில் மோதியபடி இருந்தது.
கடல் சீற்றத்துடன் காணப்பட்டதுடன், பலத்த காற்றும் வீசியது. நேற்று காலையில் மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு கட்டுமரங்களில் புறப்பட்டனர். ஆனால் அவர்களால் செல்ல முடியாத அளவுக்கு கடலில் பலத்த காற்று வீசியது.
இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரைக்கு திரும்பினார்கள். இதனால் வள்ளம் மற்றும் கட்டுமரங்கள் கடற்கரையில் மேடான பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
No comments
Thank you for your comments