Breaking News

மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் அழகு கலை பெண்கள் அமைப்பின் ஆண்டு விழா

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்ட அழகு கலை பெண்கள் அமைப்பின் ஆண்டு விழா எளிமையாக நாகர்கோயில் அருகே மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் நடைபெற்றது. 



அமைப்பின் நிர்வாகிகள் மனவளர்ச்சி குன்றியோருடன் கேக் வெட்டியும்  மதிய உணவு வழங்கியும் கொண்டாடினர். 

தமிழக அரசின் பள்ளி பாடத்திட்டத்தில்  அழகுக் கலையையும் சிறப்பு பாடமாக சேர்க்க வேண்டும் எனவும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஏராளமானோர் அழகு கலையில் ஈடுபட்டு வரும் நிலையில் அரசு வட்டியில்லா கடன் வழங்கி தொழில் துவங்க உதவ வேண்டும் எனவும் அழகு கலை பெண்கள் கோரிக்கை.

No comments

Thank you for your comments