கழுதூர் ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் பவண்குமார் நேரில் ஆய்வு...
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கழுதூர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன. இங்கு உள்ள வீடுகள் அனைத்தும் பழுதடைந்தநிலையில் உள்ளது.
இதுகுறித்து ஊராட்சி மன்றதலைவர் கருணாநிதி அரசிடம் சமத்துவபுரத்தில் 100 வீடுகளில் வசிக்கும் மக்களின் வீடுகள் சேதமடைந்தும் மழை காலங்களில் தண்ணீர் வீட்டிற்குள் பொழிவதாகவும் இதனை சரிசெய்து தரவேண்டுமெனவும் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அதன்பேரில் கூடுதல் ஆட்சியர் பவண்குமார் ஜி.கிரியப்பவனர் நேரில் வந்து கழுதூர் சமத்துவபுரத்தில் சேதமடைந்த நிலையில் இருந்த வீடுகளை ஆய்வு செய்து விரைவில் வீடுகள் சரிசெய்துதரப்படும் என தெரிவித்தார்.
பின் கழுதூர் -மேல் ஆதனூர் செல்லும் சாலை போடும் பணியினை ஆய்வு செய்து ஒப்பந்ததாரரிடம் விரைவில் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கழுதூர் ஊராட்சியில் வீட்டுக்கு வீடு சென்று குடிநீர் பழுப்பு மற்றும் ஊராட்சியில் நடைபெற்ற பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.
உடன் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி, விருத்தாசலம் உதவி செயற் பொறியாளர் சண்முக சுந்தரம், வட்டார கிராம ஊராட்சி அலுவலர் எஸ்.ஆர்.சங்கர், வட்டார ஊராட்சி அலுவலர் தண்டபாணி, உதவி பொறியாளர்கள் கார்த்தி,முருகவேல், பணிபார்வையாளர் தனசேகர்,செல்வகுமாரி,தொண்டாங்குறிச்சி ஊராட்சிமன்ற தலைவர் பச்சையப்பன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


No comments
Thank you for your comments