Breaking News

இருசக்கர வாகனம் திருடிய இருவர் கைது- 5 வாகனங்கள் பறிமுதல்

வேலூர், ஜூலை  21-

வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய இருவர் கைது 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



 விருதம்பட்டு பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதாக புகார் குவிந்த வண்ணமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு விருதம்பட்டு உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் அவர்கள் தீவிர திருடர்களை தேடிவந்த நிலையில் காட்பாடி சில்மில் பஸ் நிலையம் அருகில் தீவிர வாகண தணிகையில் இருந்தார். அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இறுவரை பிடித்து விசாரணை செய்தனர் கழிஞ்சூரை சேர்ந்த மதன் குமார். அவருடைய நண்பர் 18 வயது உடையவர். 


அவர்கள் முரன்பாடாக பதில் அளித்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர்கள் விருதம்பட்டு பகுதியில் இரவு நேரங்களில் இருவரும் கூட்டாக  சேர்ந்து இருச்சக்கர வாகனம் திருடியது தெரியவந்தது. உடனே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்..

No comments

Thank you for your comments