பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது - மத்திய நிதியமைச்சரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
புதுடெல்லி, ஜூலை 21-
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கக்கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்.பி ஆகியோர் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். அப்போது
IOB, CBI வங்கிகளை தனியார் மயப்படுத்தக் கூடாது, அந்த முயற்சி களைக் கைவிட வேண்டும் என புதுடெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களை சந்தித்து விசிக சார்பில் வலியுறுத்தி மனு அளித்தனர்.
மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்திருந்த பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்திருந்தது. இதற்கான நிதி பற்றாக் குறையை பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் பெற முடிவெடுத்தது. இந்நிலையில் தனியார்மயமாகும் வங்கிகள் குறித்த பட்டியலை நிதி ஆயோக்கிடம் வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்டரல் பேங்க் ஆஃப் உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன.
இதனைத் தொடர்ந்து தற்போது விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்.பி ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி கடிதம் வழங்கியுள்ளனர். 1939ல் தொடங்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏறத்தாழ 3,500 கிளைகளுடன் இந்தியா முழுவதும் இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார்மயமாக்குவது என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
No comments
Thank you for your comments