காட்பாடி ரயில் நிலையத்தில் 42 கிலோ கஞ்சா பறிமுதல்...!
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்திலிருந்து கொள்ளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 42 கிலோ கஞ்சா பறிமுதல்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் ரயிலில் இன்று கேட்பாரற்று நான்கு பைகள் இருந்தன. அந்தப் பைகளை சென்னை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை செய்தபோது அதில் 42 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அதனையடுத்து அந்த நான்கு பைகளையும் சென்னை குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளர் மதுசூதனன் தலைமையிலான போலீசார் கைப்பற்றி, காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலிசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 42 கிலோ கஞ்சவையும் காட்பாடி காந்திநகரில் உள்ள போதை நுண்ணறிவு பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஏ.டி ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த கஞ்சா எப்படி ரயிலில் வந்தது..? யார் கடத்தி வந்தது...? என்ற கோணத்தில் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படையினர் விராசனை மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர்.
பிடிபட்ட 42 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் இருக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்

No comments
Thank you for your comments