Breaking News

ராஜா ராணி 2 : அசிஸ்டண்ட் டைரக்டர் பரிதாபங்கள் வீடியோ வைரல்


 

சென்னை:

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொமான்ஸ் காட்சியில் நடித்து காட்டும் துணை இயக்குனர்கள் நிலையை  'அசிஸ்ட்டண்ட் டைரக்டர்கள் பரிதாபங்கள்' என வீடியோ வெளியிட்டுள்ளார் ராஜா ராணி 2 இயக்குனர் பிரவீன் பெனட்.

கொரோனா லாக்டவுன் காரணமாக தடைபட்டு இருந்த சீரியல்கள் அனைத்தும் தற்போது மீண்டும் தொடங்கிவிட்டன. முழுவீச்சில் பரபரப்பாக ஷூட்டிங் நடந்து வருகிறது. அனைத்து சீரியல் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடந்து வருகிறது.

விஜய் டிவியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் காதல், ரொமான்ஸ், குடும்ப சண்டை என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பெனட் தான் இந்த தொடரையும் இயக்கி வருகிறார்.

சமீபத்தில் ராஜா ராணி 2 ஹீரோ சித்து மற்றும் ஹீரோயின் ஆல்யா மானசா இடையே ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. அப்போது அசிஸ்ட்டண்ட் டைரக்டர்கள் பரிதாபங்கள் என அவர்கள் பட்ட கஷ்டம் பற்றி வீடியோ ஒன்றை இயக்குனர் பிரவீன் பெனட் வெளியிட்டு இருக்கிறார்.

சித்து ஆல்யா மானசா படுத்துக்கொண்டு ரொமான்ஸ் காட்சியில் நடித்தது ஒருபுறம் என்றால், அந்த காட்சிக்காக இரண்டு அசிஸ்டன்ட் டைரக்டர்கள் படுத்து நடித்து காட்டி இருக்கிறார்கள். அதைதான் "Assistant directors Parithaabangal" என குறிப்பிட்டு பிரவீன் பெனட் பதிவிட்டு இருக்கிறார்.


No comments

Thank you for your comments