Breaking News

குண்டர் சட்டத்தில் யூடியூபர் மதன் கைது... அவரது மனைவி கிருத்திகா சொல்லும் நியாயம் என்ன?

சென்னை:

ஆபாச யூடியூப்பர் பப்ஜி மதனுடன் யூ-டியூப் வீடியோவில் பேசுவது தான் இல்லை என்றும்,  தற்போது வரை வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களிடம் சொகுசு பங்களா எதுவும் இல்லை என அவரது மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பியதால் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார் கிருத்திகா...

யூடியூப்பில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதன் கடந்த மாதம் 18ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். 

யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு கோடிக்கணக்கில் மதன் பணம் சம்பாதித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்ட பப்ஜி மதன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்த நிலையில் பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று கமி‌ஷனர் சங்கர் ஜிவால், பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மதன் நடத்திய யூடியூப் சேனலுக்கு அவரது மனைவி கிருத்திகா அட்மினாக இருந்தார்.  மேலும் டாக்சிக் மதனின் ஆபாச பேச்சுக்கு உடந்தையாக செயல்பட்டதாக  அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  ஜாமீன் பெற்று தற்போது வெளியில் இருக்கிறார்.

மதன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில்,  ஜாமீனில் வெளிவந்த அவரது மனைவி  கிருத்திகா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

பப்ஜி மதனின் மனைவி கிருத்தி கூறியதாவது:-

தங்கள் மீது 200 பேர் புகார் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகும் நிலையில், யார் அந்த 200 பேர் எனத் தெரிந்து கொள்வதற்காகத்தான் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்ததாகவும் ஆனால், அதற்கு முன்பாகவே மதன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கிருத்திகா கூறினார்.

தடை செய்யப்பட்ட விளையாட்டை எனது கணவர்  மதன் விளையாடவில்லை. அதாவது, பப்ஜி விளையாட்டின் சைனா வெர்ஷன் தான் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மதன் விளையாடியது தென்கொரியா வெர்ஷன் எனபதால் அவர் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடியதாக கூற முடியாது என புதிய விளக்கத்தை அளித்தார்.

மதன் மீது 200-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுத்துள்ளதாக கூறுவது தவறு எனவும், குறிப்பிட்ட 4 பேர் மட்டுமே தமிழகம் முழுவதும் மீண்டும், மீண்டும் வெவ்வேறு பெயர்களில் புகாரளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது வரை தாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருவதாகவும், தங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை... 

ஒரேஒரு ஆடி கார் மட்டுமே தங்களிடம் இருப்பதாகவும், இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறுவது தவறு எனவும் தெரிவித்தார். 

பப்ஜி விளையாடி கடந்த 10 ஆண்டுகளாக சொத்து சேர்க்கவில்லை

என்னுடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. என்னுடைய வங்கி கணக்கை மட்டுமே மதன் பயன்படுத்தி வந்தார்.

எனது கணவர் பப்ஜி மதன் 20 மணி நேரம் வேலை செய்து பணம் சம்பாதித்தார்

யூ-டியூப் சேனலை முடக்கியுள்ளதால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது

சொந்தமாக வீடு இல்லை. மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன்.

அவர் பணமோசடி எதையும் செய்யவில்லை, சொத்துக்கள் வாங்கி குவிக்கவில்லை.

அத்தோடு, மதனுடன் ஒரு நாளும் வீடியோ கேம் லைவில் பேசியதில்லை என்ற கிருத்திகா, மதனின் யூடியூப் சேனலில் தாம் எந்த பணியும் செய்யவில்லை என்பதை சட்டப்பூர்வமாக நிரூபிப்போம் என்றும் கூறினார்.

சிலர் ஆத்திரமூட்டும் வகையில் கமெண்ட் பதிவிட்டதால் மதன் ஆபாசமாக பேச நேர்ந்ததாக கூறிய கிருத்திகா, செய்தியாளர்களின் கேள்விக்கு பின்னர் அந்த ஆபாச பேச்சுக்கள் எல்லாம் சித்தரிக்கப்பட்டவை என பப்ஜி மதனின் மனைவி கிருத்தி மழுப்பினார். 

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் பதில் அளிக்கமால் அங்கிருந்து சென்றுவிட்டார்.


No comments

Thank you for your comments