சசிகலாவின் பேச்சுக்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கடும் கண்டனம்..!- உண்மையை உடைத்த முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி
சென்னை:
எம்.ஜி.ஆரின் பெயரை இழுத்து சசிகலா தவறான விஷயத்தை தொட்டிருக்கிறார் என எம்.ஜி.ஆரின் ரசிகரும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான கே.சி.பழனிசாமி உண்மையை உடைத்துள்ளார். மேலும், சசிகலாவின் பேச்சுக்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த சசிகலா தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்த பிறகு மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். தினமும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு போன் செய்து அவர்களிடம் பேசியதை ஆடியோவாக வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் சசிகலா பேசிய ஆடியோவில், ‘மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு நான் ஆலோசனைகள் கூறி இருக்கிறேன். கட்சி தொடர்பாக என்னிடம் எம்.ஜி.ஆர். கருத்து கேட்பார். நான் சொல்லும் கருத்துக்களை எம்.ஜி.ஆர். பொறுமையாக கேட்பார். எம்.ஜி.ஆர் பேசும் போது எப்படியெல்லாம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நான் அறிவுரை வழங்கி இருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது’ என்று பேசி இருக்கிறார்.
சசிகலாவின் இந்த பேச்சு, அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்.ஜி.ஆர். பற்றி கருத்து தெரிவித்த சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இணைய தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பான மீம்ஸ்களையும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இணைய தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக எம்.ஜி.ஆரின் ரசிகரும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான கே.சி.பழனிசாமி கூறியதாவது:-
அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் பெயரை இழுத்து சசிகலா தவறான விஷயத்தை தொட்டிருக்கிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள் இதை ஜீரணிக்க மாட்டார்கள். அரசியல் விவரங்கள் குறித்து எம்.ஜி. ஆருக்கு ஆலோசனை வழங்கியதாக சசிகலா கூறியது நகைச்சுவையானது.
அ.தி.மு.க.வில் மீண்டும் சேர சசிகலாவுக்கு உரிமை உண்டு. ஆனால் அவர் எம்.ஜி.ஆருக்கு அறிவுறுத்தியது, ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியது போன்று பேசுவது எம்.ஜி.ஆர். ரசிகர்களை எரிச்சல் அடைய செய்யும். பொய்களை சொல்லும் போது அவர்களின் வரம்பை ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும்.
சசிகலா தனது ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா பற்றி பேசுவது அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே கடுமையான விமர்சனத்தை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான கே.சி.பழனிசாமி பிரிந்த அதிமுகவினர்களையும், எம்.ஜி.ஆர். ரசிகர்களையும் ஒன்றினைக்கும் வேலையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதுவரையில் 100 Zoom Meeting நடத்தியுள்ளார். இதில் பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை வைத்துள்ளனர்.
நாளை 101வது Zoom Meeting அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
23 மாவட்டங்களில் உள்ள 123 தொகுதிகளில் அதிமுக வெறும் 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றி மீதம் உள்ள 109 தொகுதிகளில் தோல்வி காரணம் என்ன?
101வது Zoom Meeting'ல் கலந்துகொண்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் 04.07.2021 @11:00AM Direct Join Zoom Meeting https://us02web.zoom.us/j/5945119322
or கலந்துகொள்ள விருப்பம் உள்ள அதிமுக தொண்டர்கள் தங்கள் பெயர், தொகுதி, தொலைபேசி எண்ணை முன்பதிவு செய்யவும். இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

No comments
Thank you for your comments