புத்தகங்களைப்போல், மரக்கன்றுகளையும் அன்பளிப்பாய் வழங்குவோம்! - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை:
புத்தகங்களைப்போல், மரக்கன்றுகளையும் அன்பளிப்பாய் வழங்குவோம்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹூண்டாய் நிறுவனம் தொடங்கி 22 ஆண்டுகளில் இதுவரை 1 கோடி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் 1 கோடியாவது கார் அறிமுக விழா இருங்காட்டுகோட்டையில் உள்ள அதன் தொழிற்சாலை வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 கோடியாவது காரை அறிமுகப்படுத்தினார். பின்னர் மு.க.ஸ்டாலின் ஹூண்டாய் நிறுவன தொழிற்சாலையை பார்வையிட்டார்.
பின்னர், ஹூண்டாய் வளாகத்தில் மரங்கன்றை நற்றார்.
ஹூண்டாய் வளாகத்தில் கடந்த 10-2-2011 அன்று நான் நட்டுவைத்த மரக்கன்று மரமாய் வளர்ந்துள்ளது. அதனருகே இன்று மேலும் ஒரு மரக்கன்றை நட்டேன்.
"மரத்தை நாம் வளர்த்தால்
மரம் நம்மை வளர்க்கும்"
- என்றார் முத்தமிழறிஞர் கலைஞர்.
புத்தகங்களைப்போல், மரக்கன்றுகளையும் அன்பளிப்பாய் வழங்குவோம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


No comments
Thank you for your comments