இந்திய செஞ்சிலுவை சங்க சார்பில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கல்
வேலூர் :
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய செஞ்சிலுவை சங்க சார்பில் 3 இலட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள் 250 சானிடைசர், 3000 முக கவசம், 1 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி, 100 முழு கவச உடை, நோயாளிகளுக்கான 100 கிட்டுகளை மருத்துவமனை உபயோகங்களுக்கு இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.06.2021) வழங்கினார்.
இந்திய செஞ்சிலுவை சங்கம் மாவட்ட கிளை சார்பில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பல்வேறு வகையான பொது சேவைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அதன் நிர்வாகிகள் தன்னார்வலர்கள் செய்து வருகிறார்கள். அந்த வகையில் முதியோர் இல்லம் மற்றும் தாய், தந்தையரை இழந்த குழந்தைகள் பராமரிக்கும் விடுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தல் மற்றும் அவர்களுக்கு நிவாரண உதவி வழங்குதல் போன்ற பணிகளை செய்து வருகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து இன்று இந்திய செஞ்சிலுவை சங்க சார்பில் 3 இலட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள் 250 சானிடைசர், 3000 முக கவசம், 1 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி, 100 முழு கவச உடை, நோயாளிகளுக்கான 100 கிட்டுகள், இறந்தவர்களின் பிரேதத்தை எடுத்து செல்ல 50 க்ஷடினல ஊடிஎநச போன்ற உள்ளிட்ட பொருட்களை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை உபயோகங்களுக்கு துணை இயக்குநர் சுகாதார பணிகள் திரு.மணிவண்ணன் அவர்களிடம் இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.விஜயராகவன், செயலாளர் திரு.மாறன், பொருளாளர் திரு.உதய சங்கர், நிர்வாகிகள் திருமதி.பர்வதா, திருமதி.அஞ்சு சக்திவேல், அலுவலக மேலாளர் திரு.தீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.
*******
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.
No comments
Thank you for your comments