Breaking News

வேலூர் கோவிட் கேர் மூலம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

வேலூர் :

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் கோவிட் கேர் மூலம் ரூபாய் 2 இலட்சம் மதிப்பிலான 2 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மாவட்ட செயல் அலுவலர் ஊரக புத்தாக்க திட்டம் திரு.எஸ். தமிழ் மாறன் அவர்கள்  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்களிடம்  இன்று  (08.06.2021) வழங்கினார்.



வேலூர் கோவிட் கேர் என்ற அமைப்பானது வேலூரில் இருந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வேலூர் வாழ் மக்களை கொண்டு அமைக்கப்பட்ட குழு ஆகும். இந்த குழுவின் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று சார்ந்த விழிப்புணர்வு முக கவசம், அன்பளிப்பு  உணவு பொருட்கள், உணவு சமைக்க தேவையான பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் இருந்து அன்பளிப்பாக வந்த 2 ஆக்ஸிஜன் செறிவூட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் இந்த குழுவின் சார்பில் மாவட்ட செயல் அலுவலர் வழங்கினார். 

வேலூர் கோவிட் கேர் ஆனது மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கோவிட் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சேவை பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழுவினருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுக்களை தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.பார்த்தீபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.விஜயராகவன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.மணிவண்ணன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் திரு.பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். 

*******

செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.

No comments

Thank you for your comments