இன்று முதல் எவை இயங்கும், இயங்காது... விதிமுறைகள் என்ன?
வேலூர் :
வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் ஏப்ரல்-1ம் தேதி முதல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 15.5.2021 அன்று அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 753 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 24.04.2021 முதல் 07.06.2021 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாகவும், அனைத்துதுறை அலுவலர்களின் தொடர் பணி காரணமாகவும், பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாகவும் கடந்த 10-நாட்களாக கொரோனா தாக்கம் குறைந்து வேலூர் மாவட்டத்தில் கடந்த 45-நாட்களில் குறைந்தபட்சமாக 05.06.2021 அன்று 209 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு 07.06.2021 முதல் 14.06.2021 காலை 06.00 மணி வரை மேலும் ஒருவார காலத்திற்கு ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பின்வரும் புதிய தளர்வுகளை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று 07.06.2021 முதல் 14.06.2021 காலை 6.00 மணி வரை ஒருவார காலத்திற்கு கீழ்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
காய்கறி மொத்த விற்பனையானது வழக்கம் போல் மாங்காய் மண்டி மைதானத்தில் தொடர்ந்து நடைபெறும்.
புதிய மீன் மார்க்கெட் பகுதியில் மொத்த விற்பனைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். சில்லரை விற்பனைக்கான கடைகள் அருகிலுள்ள தற்காலிக சித்தூர் பேருந்து நிலையத்தில் செயல்படும்.
தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், பர்ங்கள், பூக்கள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மேற்படி வகையிலான நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படலாம்.
உழவர் சந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடி பொருட்களை வாங்கும் வகையிலான அனைத்து வகையான சந்தைகளும் இயங்க அனுமதி கிடையாது.
தற்போது வாகனங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள் தொடர்ந்து இயங்கலாம்.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
மின்பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
மின்பொருட்கள், ஹார்டுவேர் கடைகள், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6.00 மணிமுதல் 5.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.
வாகன பழுது நீக்கும் மையங்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும் விற்பனை நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.
பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம் அனுமதிக்கப்படும்.
உணவகங்கள், பேக்கரிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நேரங்களில், அதாவது காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
ஏடிஎம், பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும்.
வேலூர் மாவட்டத்தில் உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காக வேலூர் மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை. பிற காரணங்களுக்காக வேலூர் மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு அவசியம்.
மேற்கண்ட காரணங்கள் தவிர வழக்கமாக அத்தியாவசியப் பணிகளுக்கு செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசால் ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட பணிகள் / நிறுவனங்கள் / தொழிற்சாலைகளுக்கு செல்லும் பணியாளர்கள் ஏற்கனவே அறிவித்தவாறு தங்களது அடையாள அட்டை அல்லது நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட அனுமதி சான்று ஆகியவற்றினை காட்டி சென்று வரலாம்.
அரசால் அனுமதிக்கப்பட்ட தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களை அந்நிறுவனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் மூலமாக இ-பதிவு முறையில் அனுமதி பெற்று பணிக்கு அழைத்து செல்லலாம்.
ஏற்கனவே நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறலாம்.
மேற்குறிப்பிட்டுள்ள கடைகள் / நிறுவனங்களை தவிர வேறு எந்த கடைகளும் திறக்க. இயங்க அனுமதி இல்லை.
மேற்கண்டவாறு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் காரணமாக மீண்டும் வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்கும் பொருட்டு கீழ்கண்ட கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்படும்.
1. திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு முன்பாக பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நிற்கும் வகையில் வட்ட வடிவிலான குறியீடுகள் அமைக்கப்பட வேண்டும். கடைக்குள் நுழையும் அனைத்து நபர்களுக்கும் சானிடைசர் வழங்கி கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும். முகக்கவசம் அணியாத நபர்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது. மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றாத கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், அவை சீலிடப்படும்.
2. மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் ஏற்படும் றெப்புகளுக்கு றெந்த நபர்களின் உடல்களை ஐந்து நபர்களுக்கு மிகாமல் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் ஃ நகராட்சி சுகாதார அலுவலர் / மாநகராட்சி சுகாதார அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்ய வேண்டும். கூட்டம் சேர்ப்பதோ அல்லது இறுதி ஊர்வலம் நடத்தவோ அனுமதி கிடையாது.
3. மருத்துவமனையில் ஏற்படும் கொரோனா மற்றும் கொரோனா அல்லாத சந்தேகத்திற்குரிய பிற நோய் தொடர்பான காரணங்களினால் இறந்தவர்களின் உடல்கள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாகவே அடக்கம் செய்யப்படும்.
மேற்கண்ட கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் விதி மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 51 முதல் 60 வரையிலான பிரிவுகளின் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வேலூர் மாவட்டத்தில் தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பினை நல்கி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்திட வேண்டும்.
No comments
Thank you for your comments