தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தமது அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுடெல்லி:
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதற்காக பிரதமர் எனக்கு வாழ்த்துச் சொன்னார். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தமது அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் உறுதி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதற்காக பிரதமர் எனக்கு வாழ்த்துச் சொன்னார். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தமது அரசு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.
கூடுதலாக தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்தல், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல், புதிய மின்சார சட்டம் விலக்கிக் கொள்ளுதல், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுதல், புதிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெறுதல், சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துதல், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குதல், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுதல், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த கோரிக்கைகள் பிரதமரிடம் வழங்கியுள்ள மனுவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் நிறைவேறும் வரை, தொடர்ந்து வலியுறுத்தப்படும்.
தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அமைச்சர்களோடு கலந்துபேசி நிறைவேற்றுவதாகவும், தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்
பெண்களுக்கான மாதந்தோறும் உரிமைத் தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும், பதவியேற்ற நாள் முதல் நிறைவேற்றி வருகிறோம். தமிழ்நாட்டில் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும். ஓட்டுப்போட்டவர்களுக்காக மட்டுமின்றி, அனைவருக்குமான அரசாக தமது அரசு செயல்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
No comments
Thank you for your comments