ஆலங்குளம் மரக் குடோனில் புகுந்த விஷப்பாம்பு... உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மரக் குடோனில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு உயிருடன் வனப்பகுதியில் விடப்பட்டது.
ஆலங்குளம் அண்ணாநகரை சேர்ந்தவர் வைர பிரகாஷ் சிவில் இன்ஜினியர் கட்டிட காண்ட்ராக்டராகவும் உள்ளார். இவர் வீட்டு அருகே கட்டிட வேலைக்கு தேவையான மரப்பலகைகள் உள்ள குடோன் உள்ளது.
இங்கு கொடிய விஷ பாம்பு இருப்பதாக ஆலங்குளம் தீயனைப்பு நிலையத்திற்கு வைர பிரகாஷ் தகவல் அளித்தார். நிலைய அலுவலர் சுடலை வேல் தலைமையில் ஏட்டு விஸ்வநாதன், மற்றும் விரர்கள் திருமலை கணேசன், ரமேஷ், ஜஸ்டின் பாக்யராஜ், செல்வராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று 4 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பை உயிருடன் மீட்டு ராமர் கோவில் வனப்பகுதியில் விட்டனர்.


No comments
Thank you for your comments