Breaking News

பொருளாதாரத்தை மீட் டெடுக்க ரகுராம் ராஜன்.. நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்.. முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு



சென்னை: 

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஆலோசனை வழங்கும் வகையில் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.


தமிழ்நாட்டின் புதிய முதல்வராக மு. க ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில், 16வது சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் இந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை பாராட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார். அதோடு தமிழ்நாடு அரசு இனி அறிவிக்க போகும் திட்டங்கள், அறிவிப்புகளை ஆளுநர் என்ற முறையில் சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்தார்.

இதில் தமிழ்நாடு அரசின் முக்கியமான திட்டமான நிபுணர் குழு திட்டம் குறித்து ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டார். 

அதன்படி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஆலோசனை வழங்கும் வகையில் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Raghuram Rajan
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் ,
  1. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ
  2. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன்
  3. ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர்அரவிந்த் சுப்ரமணியன்
  4. பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் ட்ரீஸ்
  5. முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளருமான டாக்டர் எஸ்நாராயண் 

 ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

Arvind Subramanian

இவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கும், தமிழ்நாடு அரசுக்கு பொருளாதார ரீதியான ஆலோசனைகளை வழங்குவார்கள். பொருளாதார துறையில் வல்லுனர்களாக விளங்கும் இவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அழைத்து வரப்பட்டு இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்துள்ளது.

போதிய வருமானம் இல்லாமல், பல்வேறு மாநிலங்களில் பொருளாதார ரீதியாக முடங்கி உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் ரகுராம் ராஜன் உட்பட பல்வேறு வல்லுனர்களை தமிழ்நாடு அரசு களமிறக்கி உள்ளது. கண்டிப்பாக தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக மீட்டு கொண்டு வர இது பெரிய உதவியாக இருக்கும். கொரோனாவிற்கு பின் தமிழ்நாடு வீறுநடை போட இது வழிவகுக்கும்.


  

No comments

Thank you for your comments