Breaking News

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்க ஓ. பன்னீர்செல்வம் ஒப்புதல்...!

சென்னை:

 தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று 3-வது முறையாக நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.

கீழே உள்ள  இந்த செய்தியை யும் படிக்க லிங்க் கிளிக் செய்யவும் 

அடுத்தடுத்து ஆட்சியர்கள் டிரான்ஸ்பர்.. பின்னணியில் அதிரவைக்கும் முக்கிய காரணம்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் ... பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்

எடப்பாடி எப்படி முதல்வராயிருப்பார்..? - கேள்வி எழுப்பிய சசிகலாவின் அதிரடி

தனி விமானத்தில் சிறப்பு அனுமதியுடன் அமெரிக்கா செல்லும் நடிகர் ரஜினி

இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி, கொறடா பதவி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி எடுத்துக் கொண்டு தமக்கு தராததால் ஓ. பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருந்தார். இன்றைய கூட்டத்தில் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இழுபறி தொடர்ந்தது. பின்னர் ஒருவழியாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்க ஓ. பன்னீர்செல்வம் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில மணிநேரங்களில் வெளியிடப்பட உள்ளது.

இதேபோல் கொறடா பதவிக்கு கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், விஜயபாஸ்கர் என பலரும் போட்டி போட்டு வருகின்றனர். இன்னமும் கொறடா பதவி யாருக்கு என்பதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமிக்கும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தென் மண்டலத்தைச் சேர்ந்த ஓபிஎஸ்க்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் வட தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொறடா பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


 

No comments

Thank you for your comments