Breaking News

பதவியேற்ற நாளே அதிரடி ஆய்வு- தென்காசி மாவட்ட கலெக்டர்

தென்காசி ஜூன் 17:

தென்காசி புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக இன்று பதவியேற்ற  கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் ராமநதி அணை பகுதி மற்றும் பாசன பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். 

பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்த கலெக்டர் உடனடியாக குறைகளை சரி செய்வதாக உத்தரவாதம் அளித்தார். 


மேலும் கடையம் ஏ.ஆர்.பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரானா நோயாளிகளின்  மருத்துவ முகாமை அதிரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால  சுந்தர்ராஜ் நேரடியாக அங்கிருந்த கொரானா  நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.இவ்வாறு அதிரடியாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.

Reporter by: Samuel Prabhu

No comments

Thank you for your comments