கண்ணியமாக உடை அணிய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
சென்னை:
இணைய வழி வகுப்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
“மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்புக்குழு பள்ளிகள்தோறும் ஏற்படுத்தப்படும். பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இரண்டு பேர், பெற்றோர் ஆசிரியர் குழுவில் இரண்டு பேர், பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், பள்ளி சாரா வெளிநபர் ஒருவர் என உறுப்பினர்களாக இந்த குழுவில் இருப்பர்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுதோறும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 ஆம் தேதி வரை குழந்தைகள் துண்புறுத்தலை தடுக்கும் வாரம் என்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இணைய வழி வகுப்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும். இணைய வழிக்கல்வியை முழுமையாக பதிவு செய்வதோடு, அதை மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு தொடர் ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளிகளைச் சார்ந்த அனைத்து சங்கத்தினருக்கும் போக்சோ சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments