தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவராக ச.கோபாலா சுந்தரராஜ் பொறுபேற்பு
தென்காசி ஜூன் 17:
தென்காசி மாவட்ட ஆட்சியர் இன்று பொறுபேற்று கொண்டார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக ச.கோபாலா சுந்தரராஜ் இன்று (17.06.2021) பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியத்தில் இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த ச.கோபாலா சுந்தரராஜ் தமிழக அரசின் அரசாணைப்படி தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய அரசின் குடிமைப்பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று 2012ல் சேர்ந்தார், தூத்துக்குடி மாவட்டத்தில் சார் ஆட்சியராகவும், சென்னை பெருநகர மாநகராட்சியில் வட்டார துணை ஆணையாளராகவும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியத்தில் இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது இன்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
Reporter by: Samuel Prabhu
No comments
Thank you for your comments