Breaking News

ஊராடங்கு முடிந்தவுடன் சுற்றுப் பயணம் - சசிகலா ஆடியோவால் அதிமுகவில் சலசலப்பு!

சென்னை: 

ஊராடங்கு முடிந்தவுடன் சுற்றுபயணம் அனைத்து இடங்களிலும் வருவேன். மீண்டும் தலைமை பொறுப்புக்கு வந்து அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை வழிநடத்துவேன் என்றும் சசிகலா பேசும் ஆடியோ தற்போது வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, அதிரடியாக அரசியலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசியலை விட்டு ஒதுங்கப் போவதாக கூறினார். ஆலயங்களில் தரிசனம் செய்த அவர் தற்போது ஆடியோ அரசியல் செய்து வருகிறார்.

சசிகலா உடன் போனில் பேசிய 15 பேர் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டனர். சசிகலாவுடன் போனில் பேசும் அதிமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி தலைமை எச்சரித்தும் பலர் அவருடன் பேசி வருகின்றனர்.

சசிகலாவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். தேர்தலில் பலம்மிக்க எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான். இதை சசிகலாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் ஆடியோ அரசியலைச் செய்து வருகிறார்.

பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தி, அதன் மூலம் குளிர் காய்ந்து, கட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைத்தால் நிச்சயமாக அது நடக்காது என்றும் கூறியுள்ளார் ஜெயக்குமார். அதிமுக தொண்டர்கள் விழிப்பாக உள்ளார்கள். தொண்டர்கள் எல்லோருக்கும் அவர்கள் எப்பேர்ப்பட்ட சூழ்ச்சிக்காரர்கள் என்று தெரியும். அந்த சூழ்ச்சி எந்த விதத்திலும் எடுபடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த அதிமுக மகளிர் அணி இனை செயலாளர் சண்முக பிரியாவிடம் சசிகலா பேசிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது. நியாயமாகவும் நல்ல விதமாகவும் கட்சியை கொண்டு போகனும் என்ற கட்டாயம் இருக்கு அந்த கட்டயாத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்று சசிகலா கூறியுள்ளார்.

ஊரடங்கு முடிந்தவுடன் சுற்றுபயணம் அனைத்து இடங்களிலும் வருவேன். மீண்டும் தலைமை பொறுப்புக்கு வந்து அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை வழிநடத்துவேன் என்றும் சசிகலா பேசும் ஆடியோ தற்போது வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் கலகத்தை ஏற்படுத்த சசிகலா தயாராகி விட்டார். 

No comments

Thank you for your comments