அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு... அதிகாரிகள் அதிரடியாக மீட்பு நடவடிக்கை...
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள தொழுதூரிலிருந்து எழுத்தூர் செல்லும் சாலையில் சுடுகாட்டிற்கு அருகே கொரக்கை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் காலமேகம் என்பவர் (64) 2ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.
அதன் அருகே உள்ள ஓடை மற்றும் வாய்க்கால் மற்றும் எழுத்தூர் செல்லும் சாலை ஆகிய அரசு நத்தம் பொறம்போக்கு நிலம் சுமார் இரண்டு ஏக்கருக்கு மேல் ஓடை மற்றும் நீர்வரத்து வாய்க்காலை மறைத்து ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி கம்பி வேலி அமைந்துள்ளார்.
இதற்கு தொழுதூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இரவோடு இரவாக வீடு கட்டியுள்ளார். அதனை சில தினங்களுக்கு முன் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் வேலை செய்யாமல் இருந்தார் . இந்நிலையில் இரவோடு இரவாக தென்னை மரங்களை வைத்துள்ளார்.
இந்நிலையில் விசிக மங்களூர் ஒன்றிய பொருளாலர் தொழுதூர் இரா.ரமேஷ் அளித்த புகாரின் பேரில் திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்செல்வி, இராமநத்தம் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் முன்னிலையில் குறு வட்ட அளவாளர் கார்த்திக் வருவாய் ஆய்வாளர் திருநாவுக்கரசர் மற்றும் தொழுதூர் கிராம நிர்வாக அலுவலர் ராசு மற்றும் கிராம உதவியாளர் ராதா ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை அளவீடு செய்தனர் பின் 3 நாட்களுக்குள் நிலத்தை மீட்டுதருவதாக உறுதியளித்தனர்.
உடன் ஊராட்சிமன்றதலைவர் குணசேகரன்,விசிக மங்களூர் கிழக்கு ஒன்றிய பொறுலாளர் பாரதவளவன், திருசெல்வம், தொழுதூர் காசி, பழனி, ராசா, வெங்கடேசன், டைகர் சிவா, திருமேணி, பாண்டியன், பிரபாகர், பாலா மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments