Breaking News

பாத்ரூமில் போட்டோ ஷூட் - விஜய் பட நடிகை

விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை, பாத்ரூமில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.


விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அம்ரிதா ஐயர். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அமிர்தா ஐயரை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் உட்கார்ந்தவாறு இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

மேலும் போட்டோஷூட் எடுக்க இது தான் சரியான இடம் என்று நினைக்கிறேன் என்றும் அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பல லைக்குகள் குவிந்துள்ளது.

2018ஆம் ஆண்டு வெளியான படை வீரன் படத்தின் மூலம் மலர் என்ற கதாப்பாத்திரத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் அம்ரிதா. இதனை தொடர்ந்து காளி படத்தில் விஜய் ஆண்டனியின் ஜோடிகளில் ஒருவராக நடித்தார். இவரின் நடிப்பில் கடைசியாக வணக்கம் டா மாப்பிள்ளை வெளியானது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக நடித்திருந்தார்.

பிக்பாஸ் கவின் நடித்துவரும் "லிப்ட்"  என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் அம்ரிதா . இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் விரைவில் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 

No comments

Thank you for your comments