Breaking News

திண்டுக்கல் அருகே நடந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேர் கைது

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாலப்பட்டி காமாட்சி நகரில் கடந்த 10-ம் தேதி சிவக்குமார் என்பவர் வீட்டில் ரூ.23 லட்சம், 41 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.


இச்சம்பவத்தில் சிவகுமாரின் புகாரின் பெயரில் திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவின் பேரில் புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் மேற்பார்வையில் தாலுகா காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் புறநகர் குற்றத் தடுப்பு காவல் துறையினர் சார்பு ஆய்வாளர் அழகர்சாமி, பொன்குணசேகரன், முத்துச்சாமி, சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் காவலர்கள் மணிகண்டன், மருதுபாண்டி, கிருஷ்ணமூர்த்தி, ஜெயகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

அப்போது  திண்டுக்கல்லை சேர்ந்த வீரபத்திரன், சுவாமிநாதன், ஹரிபிரசாத், ரமேஷ்ராஜா, வினோத் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.15,80,000, 25 பவுன் தங்க நகைகள்,3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

By : திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்  

No comments

Thank you for your comments