Breaking News

செப்டம்பர் 15-ந் தேதிக்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்- அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை



சென்னை:

செப்டம்பர் 15-ந் தேதிக்குள் இந்த 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.


தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடத்தப்படாமல் இருந்ததால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

செப்டம்பர் 15ம் தேதிக்குள் இந்த 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

இதனையடுத்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments