இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை 50%க்கு மேல் உயர்த்த உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதாட உத்தவ் தாக்கரே கோரிக்கை
புதுடில்லி :
மாநிலங்கள் பல்வேறு வகுப்பினருக்கு வழங்கும் இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கப்பட மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தானே மனுச் செய்து வாதாட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அமைச்சரவை மற்றும் அதிகாரிகளுடன் முதன் முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அன்று காலை சந்தித்து பேசினார் மகாராஷ்டிர மாநில உதவி முதல்வர் மற்றும் நிதியமைச்சருமான அஜித் பவார்,மகாராஷ்டிர பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் மாநில தலைமைச் செயலாளர் சீதாராம் குந்தே ஆகியோர் இன்று காலை 90 நிமிடம் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினார்கள்.
மகாராஷ்டிர மாநிலம் சார்பில் 12 மிக முக்கியமான விஷயங்கள் குறித்து விளக்கமான மனு ஒன்றையும் 6 மாநில முதல்வர்கள் தாக்கரே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தந்தார்.
மகாராஷ்டிர மாநில இட ஒதுக்கீட்டுக்கு பொறுப்பான அமைச்சரவைக் குழுவின் தலைவராக அசோக் சவான் இருக்கிறார். மாநில அரசுகளுக்கு கூடுதல் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அதிகாரம் வழங்குகிறது. ஆனால் அதே சமயத்தில் கூடுதல் இட ஒதுக்கீடு காரணமாக இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கட்டளையிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குவதால் என்ன பயன் என்று அசோக் சவான் கேள்வி எழுப்பினார்.
மராத்தி வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் ஓபிசி வகுப்பினருக்கு ஆன அரசியல் இட ஒதுக்கீட்டையும் உச்சநீதிமன்றம் தடை செய்து விட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் கூறிய முக்கிய காரணம் மகாராஷ்டிர மாநிலத்தில் இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தை தாண்டி விடுகிறது என்பது தான். எனவே மாநிலங்கள் 50 சதவீதத்துக்கு கூடுதலாக தங்கள் மாநிலத்தில் இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்து மாநில அரசுகள் சார்பாக வாதாட வேண்டும் என்றும் அசோக் சவான் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமல்ல பல்வேறு நிறுவனங்களிலும் அரசு பணிகளிலும் பதவி உயர்வுக்கான கோரிக்கைகள் அப்படியே தேங்கி கிடக்கின்றன உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவுகள் காரணமாக இந்த தேக்க நிலை தோன்றியுள்ளது. இது மகாராஷ்டிர மாநிலத்தின் நிலை மட்டுமல்ல. மற்ற மாநிலங்களிலும் இதுதான் நிலை. எனவே தேசிய அளவில் பதவி உயர்வுக்கான பொதுக் கொள்கை ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிர அமைச்சர்கள் குழு பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியது.
விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டம் தற்போது காப்பீட்டு நிறுவனங்கள் 20 சதவீதத்துக்கும் மேலாக லாபம் அடைய இடமளிக்கிறது இந்த காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு உயர்ந்தபட்ச பலனைத் தரவில்லை. எனவே பீடு மாவட்டத்தில் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். அந்த திட்டத்தின் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனங்கள் 20 சதவீதத்துக்கு மேல் கொள்ளை லாபம் அடைய முடியாது. கூடுதல் லாபம் அனைத்தும் விவசாயிகளுக்கு திருப்பி விடப்படும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் பயிர் காப்பீட்டு திட்டத்தை மாநில அரசு அமல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி அனுமதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மாநில உதவி முதல்வர் அஜித் பவார் கேட்டுக்கொண்டார்.
மெட்ரோ கார் ஷெட் பிரச்சனை மற்றும் மகாராஷ்டிர மாநிலத்துக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய பாக்கி தொகை ஆகியவை உடனடியாக மகாராஷ்டிர மாநிலத்துக்கு கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது அதனை பரிசீலித்து உடனடியாக மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளுநர் மேலவைக்கு நியமிக்க வேண்டிய 12 உறுப்பினர் இடங்கள் காலியாக கிடக்கின்றன அந்த காலியாக கிடைக்கின்ற இடத்துக்கு ஆளுநர் உடனடியாக 12 மேலவை உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் இருந்து வந்திருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமரிடம் பேசிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தான் மட்டும் தனியாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார். செய்தியாளர்களை சந்தித்து பிரதமருடன் நடந்த பேச்சுவார்த்தை பற்றிய விவரங்களை உத்தவ் தெரிவித்தார். நாங்கள் கூறியவைகளை முழுக் கவனத்துடன் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார் பயனுள்ள நடவடிக்கைகள் தொடரும் என்று நம்புகிறேன் என செய்தியாளர்களிடம் உத்தவ் தாக்கரே கூறினார்.
No comments
Thank you for your comments