விசிக, அரசு ஊழியர் அய்க்கிய பேரவை சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்
தர்மபுரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் ஆணைக்கிணங்க 170 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கள்
தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் அரசு ஊழியர்கள் அல்லாத ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 170 குடும்பங்களுக்கு அரிசி காய்கறி முக கவசம் ஆக்சிஜன் அளவு மானி உள்ளிட்ட பொருட்களை அரசு ஊழியர் அய்க்கிய பேரவையின் தர்மபுரி மாவட்ட செயலாளர் வசந்த் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
நிவாரண பொருட்களை வழங்க உதவிய மருத்துவர்கள் சுகனேஷ் சதீஷ் பொறியாளர் ரமேஷ் பாஸ்கரன் முத்துராமன் உள்ளிட்டோருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ராகுல்சித்தார்த் நிகில் ராமசாமி முருகன் வேடியப்பன் சஞ்சீவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments