நடுரோட்டில் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம் ...
திண்டுக்கல்
இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து நடுரோட்டில் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த கோவிலூர் மேற்கு தெருவைச் சேர்ந்த 65 வயதான ஆறுமுகம் என்பவர் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமையான நேற்று உயிரிழந்தார்.
சனிக்கிழமையான இன்று மதியம் 12 மணியளவில் அவரது உடலை புதைப்பதற்காக ஊர்வலமாக உறவினர்கள் எடுத்து வந்தனர் அப்போது ஒரு தரப்பினர் இங்கு குடியிருப்பு பகுதிகளாக உள்ளதால் உடலை புதைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளாததால் இறந்தவரின் உறவினர்கள் உடலை இறக்கி நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தடுத்து அவர்களை அப்புறப்படுத்தி கடந்த 50 ஆண்டுகளாக அதே இடத்தில் புதைத்து வருபவர்களின் அதே இடத்திலேயே புதைக்க அனுமதி அளித்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. ஏராளமான எரியோடு மற்றும் குஜிலியம்பாறை காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
மேலும் இறந்தவரின் உறவினர்கள் கூறும்போது 50 ஆண்டு காலமாக நாங்கள் புதைத்து வந்த இடத்தில் தற்போது ஒரு சிலர் புதைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் எங்களுக்கு என்று அரசு தனியாக சுடுகாட்டு இடம் ஒதுக்கி கொடுத்தால் நாங்கள் அங்கேயே புதைத்து கொள்வோம் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து எதிர்தரப்பினர் அவரிடம் கேட்டபோது, ஆதிகாலத்தில் வீடுகள் இல்லாமல் காடாக இருந்த இந்த இடத்தில் அவர்கள் புதைத்து வந்துள்ளார்கள். ஆனால் தற்போது இந்த பகுதி முழுவதும் குடியிருப்பு அதிக அளவில் உள்ளதால் வீட்டின் முன்பாகவே இறந்தவர்களை புதைப்பதால் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தெரிவித்தனர்.
மேலும் சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால் ஓரிரு மாதங்களில் சுடுகாடு அமைந்துள்ள பகுதி சாலை அமைக்கப்படும் எனவும் எனவே தங்களுடைய சமூகத்திற்கு சுடுகாட்டுக்கு இடம் அரசு ஒதுக்கி தர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தனர்.
No comments
Thank you for your comments