Breaking News

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம்....


சென்னை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுமார் 500 பேருக்கு மேல் கொரண மருந்து வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலில் வாடி வதங்கி  பல மணி நேரங்களாக நின்று கொண்டிருக்கின்றனர்.

The footpath outside the Kilpauk Medical College in Chennai to buy the drug(Remdesivir).

சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையில் மட்டும்தான் இந்த மருந்து கிடைக்கிறது. இதனால் சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கு மருந்துவாங்க பரிந்துரை செய்கின்றனர்.

இதனால் நண்பருக்காக, உறவினர்களுக்காக கொரானா மருந்து வாங்க கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் காத்து நின்று கொண்டிருக்கின்றனர். 

கொரானாவின் கொடுமையை விட இந்த கொளுத்தும் வெயிலின் கொடுமை அதிகம் என  வரிசையில் நிற்பவர்கள் வேதனையுடன் கூறுகினன்றனர். 

சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் -கொரானா மருந்து கிடைக்க வகை செய்ய வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று  பொதுமக்கள் சுகாதார துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்... செவி சாய்க்குமா.... சுகாதாரதுறை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 


No comments

Thank you for your comments