விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் கேசவ பெருமாளை ஆதரித்து சகாயம் பிரச்சாரம்
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சகாயம் அரசியல் பேரவை வேட்பாளர் கேசவ பெருமாளை ஆதரித்து சகாயம் ஐஏஎஸ் அவர்கள் விருத்தாச்சலம் நகர வீதிகளில் நடை பயணமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர்... மதவெறியை என்னுடைய இயக்கம் எதிர்க்கிறது. இன்னொருபுறம் ஊழல் கட்சிகள். இன்றைக்கு நம்முடைய முதல்வராக இருக்கக்கூடிய திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள் இரண்டு பேருமே மாறி மாறி குற்றச்சாட்டை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இருவருமே தங்களுடைய ஊழலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள், எனவே ஊழல் ஊழல் கட்சிகள் ஒருபுறம் மதவாத கட்சிகள் ஒருபுறம் இரண்டையுமே நாங்கள் தமிழக மண்ணில் நிராகரித்து மதசார்பற்ற சமூகநீதியான தமிழகத்தில் ஒரு ஊழல் அற்ற, வெளிப்படையான, நேர்மையான எதிர்காலம் இளைஞர்களுக்கான மிகப்பெரிய வரலாற்றை அமைக்கக்கூடிய ஆட்சியை அமைக்க எத்தனிகிறோம். என்று கூறி வாக்கு சேகரித்து பேசினார்.
No comments
Thank you for your comments