Breaking News

விருத்தாசலம் சுயேட்சை வேட்பாளர் வாக்குறுதி

 விருத்தாசலம் :

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சரவணன் வாக்குறுதிகளை கூபுருசு சின்னத்தில் வாக்கு கேட்டார்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சரவணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதவாது,

விருத்தாசலம் தனி மாவட்டம், ஆண்டுக்கு 10000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இலவசஇன்டர்நெட், ஏழை பெண்கள் திருமணத்திற்கு 10பவுன் நகை மற்றும் சீர்வரிசை செய்து தரப்படும் என்றும், NLC உபரி நீரை மணிமுக்தாறுக்கு கொண்டுவந்து தடுப்பணை கட்டி விவசாயத்திற்கு பயன்படுத்துதல், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்து அரசு ஊழியராக்க பாடுபடுவேன் என்றும் கூறினார். மேலும் விருத்தாசலம் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு பீங்கான் தொழிற்சாலை விரிவு படுத்தப்படும். வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுக்கு மணி மண்டபம் அமைத்தல் உள்ளிட்ட தேர்தல் அறிக்கைகள் வாக்குறித்தியாக அளித்துள்ளார்.



No comments

Thank you for your comments