மனமுடைந்துவிட்டேன்.... கண்ணீர் விடும் நடிகை ராதிகா
அகமதாபாத்தில் இருக்கும் சார்தாபென் மருத்துவமனைக்கு வெளியே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் படுத்துக் கிடப்பதை பார்த்த ராதிகா சரத்குமார் மனமுடைந்துள்ளதுடன், கோபப்பட்டிருக்கிறார்.
கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவை பெரிய அளவில் பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமூக வலைதளங்கள் பக்கம் சென்றாலே பரிதாபமாக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மருத்துவமனைகளில் பெட் கிடைப்பது இல்லை, மேலும் மருந்துகளும் கிடைக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உதவி கேட்டு கெஞ்சுகிறார்கள்.
அந்த மருந்து ஸ்டாக் இல்லையே என்ன செய்ய முடியும், மருத்துவமனையில் இடம் இல்லையாம் என்று சமூக வலைதளவாசிகள் பதில் அளிக்கிறார்கள். இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் சார்தாபென் மருத்துவமனைக்கு வெளியே எடுக்கப்பட்ட வீடியோவை பார்ப்பவர்களின் கண்கள் கலங்குகிறது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மகனை சாலையில் படுக்க வைத்துவிட்டு பெட் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தாய் ஒருவர் அமர்ந்திருக்கிறார். 108 ஆம்புலன்ஸில் வந்தால் தான் அந்த மருத்துவமனையில் அனுமதிப்பார்களாம். அந்த தாய் தன் மகனை ஆம்புலன்ஸில் அழைத்து வராததால் அனுமதிக்க மறுத்துவிட்டார்களாம். அந்த வீடியோவை பார்த்த ராதிகா சரத்குமார் கொந்தளித்துள்ளார்.
ராதிகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. கோபம் வருகிறது, அதே நேரம் எதுவும் செய்ய முடியாத நிலை என தெரிவித்து கண்ணீர் தாரை தாரையாக ஓடும் எமோஜியை போஸ்ட் செய்திருக்கிறார்.
ராதிகாவின் ட்வீட்டை பார்த்தவர்களோ, வீடியோவை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. குஜராத் அவர் மாநிலமாச்சே. அங்குமா இந்த அவல நிலை. குஜராத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை. அந்த பையனுக்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும். அது என்ன 108 ஆம்புலன்ஸில் வந்தால் தான் அனுமதிப்போம் என்பது. சுத்த முட்டாள்தனமாக இருக்கிறதே என தெரிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments