சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை... வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அவர் தனது சிறு வயது தோழியுடனான புகைப்படத்தை வெளியிட்டு ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். தற்போது அது வைரலாகி வருகிறது.
![]() |

சிவகார்த்திகேயனுடன் ’ரஜினி முருகன்’ மற்றும் ’ரெமோ’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அதேபோல் சிவகார்த்திகேயனுடன் ’ஹீரோ’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர்கள் இருவரும் சிறுவயது முதலே தோழியாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று கல்யாணி பிரியதர்ஷன் பிறந்தநாளை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கல்யாணி பிரியதர்ஷனுக்கு கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் சிறு வயதில் எடுத்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் சிறுவயதில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
மேலும், #KannilEnte க்கான டீஸர் இப்போது முடிந்துவிட்டது! Red heart
உங்களுக்கு மீண்டும் ஒரு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மு கல்யாணி பிரியதர்ஷன் என்று பிறந்த நாள் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
No comments
Thank you for your comments