Breaking News

குடும்பத்துடன் வந்து ஓட்டு போடும் நடிகர்கள்...

 சென்னை:

சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் நடிகர்கள் சிவகுமார்ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, கார்த்தி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் வாக்குகளை குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.

தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதுமே தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் ஆரம்பித்துவிட்டது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் (04-04-2021) நிறைவடைந்தது.

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

சிவகுமார்


  நடிகர் சிவகுமாரும் குடும்பத்துடன் காலையிலேயே வாக்களித்தார். சிவக்குமார்அவரது மனைவியுடன் வாக்களித்தார். நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகாநடிகர் கார்த்திஅவரது மனைவி என குடும்பத்தினர் தங்கள் வாக்குகளை தி.நகரிலுள்ள ஹிந்தி பிரச்சார சபாவிலுள்ள வாக்குச்சாவடியில் பதிவுச் செய்தனர்.

கமல்ஹாசன்

  


    நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் உடன் சேர்ந்து வாக்களித்தார். சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் அவர் வாக்களித்தார்.

    அவர், தனது சமூக வளைதளத்தில், மக்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி. ஜனநாயகக் கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிவிட்டு கோவைக்கு வந்துவிட்டேன். கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும். செய்யுங்கள்... என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்

 நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.





அஜித்

 



  நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களித்தார். திருவான்மியூர் வாக்குச்சாவடியில் முகக்கவசம் அணிந்து வந்து நடிகர் அஜித்தும் ஷாலினியும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

விஜய்





  நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சைக்கிளில் வந்தார். விஜய் சைக்கிளில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். விஜய் வாக்களிக்க வந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது.



  பெட்ரோல் விலை உயர்வை இப்படி குறியீடாக சொல்லியிருக்கிறார் என்று சமூகவலைத்தளத்தில் பேசப்பட்டது. இதனால், சைக்கிளில் வந்த நடிகர் விஜய் ஸ்கூட்டரில் திரும்பிச் சென்றார்.

விஜய் குறித்து சாந்தனு டிவிட்

#Beastmode என சிபி சத்தியாராஜ், விஜய் சைக்கிளில் வரும் புகைப்படத்தை பதிவு செய்தார். அதற்கு ரீடிவிட் செய்தார் சாந்தனு.

அதில், நடிகர் சாந்தனு, விஜய் சைக்கிளில் வரும் புகைப்படத்தை பதிவு செய்து, என்ன தைரியம் இவருக்கு என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

Ennnaaa dhairyam ivuruku #BeastMode

விக்ரம்



நடிகர் விக்ரம் தன்னுடைய வீட்டில் இருந்து, வாக்குச்சாவடிக்கு நடந்தே வந்து தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார். இவர் நடந்து வந்து ஓட்டு போடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

குஷ்பு

இதேபோல், நடிகை குஷ்புவும் வாக்கு பதிவு செய்த பின் தனது டிவிட்டர் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.



அதில் "Happy me. Casted my vote. Prime duty done"  என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் 

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் மெட்ரிக் பள்ளியில் வரிசையில் நின்று தனது வாக்கைச் செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

'ஒரு குடிமகனாக என்னுடைய கடமையைச் செய்துவிட்டேன். ஒவ்வொரு முறை வாக்களிக்கும்போதும் இன்று நம் கடமையைச் செய்யப் போகிறோம் என்ற உற்சாகம் இருக்கும். இம்முறையும் அதைச் செய்திருக்கிறேன்'. இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

விஜய்சேதுபதி 

நடிகர் விஜய் சேதுபதி கோடம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது பேசிய அவர்,"நான் சாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டவன். மனிதர்கள்தான் முக்கியம் என நினைப்பவன் என்று அவர் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments