234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல்- சத்ய பிரதா சாகு
சென்னை:
தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது,
தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும். சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக பரவி வரும் தகவலில் உண்மையில்லை.
பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடு தயார் நிலையில் உள்ளது என்றார்.
No comments
Thank you for your comments