கொரோனா தொற்று அதிகரிப்பால் உழவர் சந்தை, காய்கனி கடைகள் இடமாற்றம்
வேலூர், ஏப்.21-
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசால் 20.04.2021 முதல் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 20.04.2021 முதல் வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கின்போது தனியார்/பொது பேருந்து போக்குவரத்து, வாடகை, டாக்சி, ஆட்டோ மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. இருப்பினும் அவசர மருத்துவ தேவைகள் மற்றும் ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம் தினசரி பத்திரிக்கை விநியோகம் மருத்துவமனைகள் மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் மருத்துவ துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும்.
பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்படும். வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து மேற்கூறிய காலகட்டத்தில் அனுமதி கிடையாது.
மாவட்டங்களுக் கிடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகளின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல், கூட்டநெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவிர்த்தல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
தடையின்றி தொடர்ந்து செயல்படக்கூடிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதிக்கபடுகிறது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு
வேலூர் மாவட்டத்தில் இறைச்சிகடைகள், மீன் மார்க்கெட், காய்கறிகடைகள், பூ மார்க்கெட், பலசரக்குகடைகள், சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிகவளாகங்கள் அனைத்தும் செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. இதனை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி செயல்கள், சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைபொருட்கள், எரிபொருள் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
உணவகங்களில் காலை 6.00 மணிமுதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. திருமண விழாவில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலத்தில் 50 -நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொண்டு நடத்திகொள்ள எந்தவிதமான தடையும் இல்லை. மேற்கண்டவாறு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை திருமண மண்டப உரிமையாளர்கள் உறுதிசெய்து கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில் திருமண மண்டப உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், வேலூர் கோட்டை, அமிர்தி பூங்காக்கள் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
பொது ஊரடங்கு
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்குகடைகள் உட்பட அனைத்து கடைகளும் வணிகவளாகங்கள், அனைத்து ஜவுளி மற்றும் ஜுவல்லரி ஷோரூம்கள் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9.00 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
குடமுழக்கு / திருவிழா நடத்துவதற்கு தேதி நிர்ணயம் செய்து அனுமதி டிபற்று முன்னேற்பாடுகள் செய்திருக்கும் பட்சத்தில் கோயில் பணியாளர்கள், கோயில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50- நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு உரிய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
புதியதாக குடமுழக்கு / திருவிழாக்கள் நடத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்படமாட்டாது.
கல்லூரி / பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணையவழியாக வகுப்புகளை எடுக்கவேண்டும் மற்றும் தேர்வுகளை இணையவழி மூலமாகவே நடத்தப்படவேண்டும்.
கல்விச்சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது.
கிஙிகிசிஹிஷி போன்ற கோடைகால பயிற்சி முகாம்கள் ஆகியவை நடத்த தடை விதிக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை திரையரங்க நிர்வாகம் உறுதி செய்யவேண்டும். தவறும்பட்சத்தில் திரையரங்க உரிமையாளர் மீது உரியநடவடிக்கை மேற்டிகாள்ளப்படும்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உழவர் சந்தைகள், காய்கறி மற்றும் பூக்கடைகள் இயங்கும் இடம் குறித்து கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது.
மேற்படி காய்கறி கடைகள் அனைத்தும் வேறு இடம் மாற்றப்படுவதால் மொத்த வியாபார பூக்கடைகள் தவிர, நேதாஜி மார்க்கெட்டில் இயங்கும் ஏனைய அனைத்து கடைகளும்; 20.04.2021 முதல் முழுவதுமாக செயல்படாது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோயினை பரவலை கட்டுப்படுத்த பொது மக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிவது, வீட்டிலும் பணிபுரியவும் இடங்களில் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது போன்ற செயல்களை தவறாமல் கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் கேட்டுக் கொள்கிறார் என்று வேலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments