மதுக்கூடங்கள் அனைத்தும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் இயங்கவேண்டும்-வேலூர் ஆட்சியர்
வேலூர், ஏப்.21-
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 20.04.2021 முதல் 30.04.2021 வரை திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 09.00 மணி வரை 50% இருக்கை வசதிகளுடன் செயல்பட வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக கட்டாயமாக மூடப்பட வேண்டும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மற்றும்(FL2/FL3/FL3A/ FL3AA, FL4A, FL10 & FL11 மற்றும் FL6 ஐ தவிர) மூடிவைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே மேற்படி தினங்களில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஒட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 20.04.2021 முதல் 30.04.2021 வரை திங்கட்கிர்மை முதல் சனிக்கிழமை வரை இரவு 09.00 மணி வரை 50% இருக்கை வசதிகளுடன் செயல்பட வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக கட்டாயமாக மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் விதிகளை மீறி திறக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதே போல் அன்றைய தினங்களில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலும் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மதுக்கூட உரிமைதாரர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments