வாக்குசாவடி மற்றும் வாக்கு எண்ணும் மைய அனுமதி அட்டை... கோரிக்கையை பரிசீலித்த ஆட்சியர்
ஈரோடு:
வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் 2021 ஐ முன்னிட்டு தேர்தலுக்கு வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களுக்கான செய்தியாளர் அடையாள அட்டை தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சார்பாக செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதில் சில பத்திரிக்கையாளர்களுக்கு இன்னும் அடையாள அட்டை வழங்கப்படாததால் சில நாளிதழிகளிலின் நிருபர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ் குமார் ஆகியோரை அணுகினர் .
கோரிக்கையை பரிசீலித்த ஆட்சியர் மற்றும் பிஆர்ஓ கூறுகையில் தேர்தல் ஆணையம் அங்கீகார அடிப்படையிலும், பத்திரிக்கைகளின் உண்மைத்தன்மை அடிப்படையிலும் கண்டிப்பாக வாக்குசாவடி மற்றும் வாக்கு எண்ணும் மைய அனுமதி அட்டை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். அவர்களுக்கு
பத்திரிகையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.


No comments
Thank you for your comments