Breaking News

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை:  

மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு இன்று கொரோனா தொற்று செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டுத் தனிமையில் உள்ளார்.


தமிழகத்தில் ஒரே கட்டமாக 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்குவதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரசாரமும் தீவிரமடைந்துள்ளது. 

திமுக  மாநில மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்', மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்  ஆகிய திமுக முன்னெடுத்த பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும், தற்போது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.  

நேற்று (ஏப்.2) திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, சங்கர்நகர் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் எ.எல்.எஸ்.லட்சுமணன் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்  அப்துல் வஹாப் ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம்  மேற்கொண்டிருந்தார். 

இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் போன்ற லேசான அறிகுறிகள் ஏற்பட்டதால் உடனடியாக கனிமொழி சென்னை திரும்பினார்.

இந்நிலையில் இன்று (03/04/2021) திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் வீட்டுத் தனிமையில் உள்ளார்.

No comments

Thank you for your comments