விருத்தாசலம் ஐஜேகே வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
விருத்தாசலம்:
விருத்தாசலம் ஐஜேகே வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்த பொதுமக்கள்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆர் பார்த்தசாரதி விருத்தாசலம் ஒன்றியம் பரவலூர் முகுந்தன் உள்ளூர் கொடுக்கூர் பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீதி மையம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆட்டோ சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அப்போது வேட்பாளர் பார்த்தசாரதி பேசுகையில் நான் வெற்றி பெற்றால் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக்க சட்டசபையில் குரல் கொடுப்பேன், மகளிர் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் அமைத்து தருவேன், என்எல்சி உபரி நீரை மணிமுத்தாறுக்கு கொண்டுவந்து தடுப்பணை கட்டி விவசாயத்திற்கு பயன்படுத்த வழிவகை செய்து, தற்காலிக துப்புரவு பணியாளர்களை அரசுப் பணியாளர்களாக ஆக்க பாடுபடுவேன், நலிவடைந்த அரசு பீங்கான் தொழிற்சாலையை விரிவுபடுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அதன் மூலம் 10,000 படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்கப்படும், அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரமுயர்த்த பாடுபடுவேன், பொதுமக்களின் நலன் கருதி தட்டுப்பாடின்றி குடிதண்ணீர் கிடைக்கச்செய்வேன், பல கிராமங்களில் சாலை வசதி இல்லாத நிலையில் உள்ளது அந்த கிராமங்களை தேர்வு செய்து புதிய சாலை வசதி செய்து கொடுப்பேன் என்று ஆட்டோ சின்னத்திற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
இதில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஜெயவேல், மாவட்ட பொருளாளர் செல்லத்துரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ் பாபு, நகர பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட பார்க்கவகுல சங்கத்தலைவர் ராயர், மக்கள் நீதி மையம், சமத்துவ மக்கள் கட்சி, மாவீரன் மஞ்சள் படை உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments