Breaking News

மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அ.தி.மு.க. அல்ல! - எமர்ஜென்சியையே பார்த்தவன் இந்த ஸ்டாலின்

அரியலூர்:

எமர்ஜென்சியையே பார்த்தவன் இந்த ஸ்டாலின்; ஐடி ரெய்டுக்கெல்லாம் பயப்படாது திமுக, மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அ.தி.மு.க. அல்ல! என்றும், மேலும் தனது மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி. சோதனை நடத்தி வருவதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி. சோதனை நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரசாரத்தில் அவர் கூறியதாவது:

மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். ஐடி.ரெய்டு மூலம் வீட்டுக்குள் திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. ரெய்டு போன்ற சலசலப்புக்கு எல்லாம் திமுக அஞ்சாது. அதிமுகவை மிரட்டுவது போல் திமுகவை மிரட்ட முடியாது.  மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். ஐ.டி. ரெய்டு மூலம் வீட்டுக்குள் திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.

மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பா.ஜ.க. தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது.  முதல்வர் - அமைச்சர்கள் - தலைமைச் செயலாளர் வீடுகளில் எல்லாம் ரெய்டு நடத்தி அதிமுகவை மிரட்டி உருட்டி தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன. 

ஆனால், திமுக இதற்கெல்லாம் அஞ்சாது

மோடிக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன்!

நான் தலைவர் கலைஞர் அவர்களின் மகன் – இது திமுக என்பதை மறந்து விடாதீர்கள்”

இன்னும் 3 நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வருமான வரித்துறையை வைத்து எங்களை முடக்க முடியாது"

எமர்ஜென்சியையே பார்த்தவன் இந்த ஸ்டாலின்; ஐடி ரெய்டுக்கெல்லாம் பயப்படாது திமுக

மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது.

மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல!

அச்சமில்லை! துணிந்து எதிர்ப்போம்!

உங்கள் தப்புக்கணக்குக்கான தெளிவான பதிலை மக்களே ஏப்.6-இல் வழங்குவர்.

அதிமுகவின் பணப்பட்டுவாடாவை மறைக்கவே ஐடி ரெயிடு நடத்தியுள்ளது பாஜக"

இவ்வாறு அவர் கூறினார்.

தலைவர்கள் கண்டனம்

இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியில்,



வருமான வரி சோதனை போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஜனநாயகம் அல்ல, திமுக ஒருபோதும் அடக்குமுறைக்கு அஞ்சாது- பூஞ்சாண்டிக்கு பயப்படமாட்டோம்... என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது,    மகள் செந்தாமரை வருத்தப்பட்டால் ஸ்டாலின் மனம் தாங்கமாட்டார் என நினைக்கிறார்கள். ரெய்டுக்கு எல்லாம் பயந்து இருந்தால் என்றைக்கோ திமுக செத்து போய் புல் முளைத்திருக்கும். 

தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடத்துகின்றனர். வருமான வரி சோதனை போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஜனநாயகம் அல்ல.  கண் துடைப்புக்காக அதிமுகவினரின் இடங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது. திமுகவை பயமுறுத்தவே வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவின் பணப்பட்டுவாடாவை மறைக்கவே ஐடி ரெயிடு நடத்தியுள்ளது பாஜக - @INCtamilnadu  தலைவர் திரு. @KS_Alagiri  அவர்கள் கண்டனம்.

அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை ஆளுநரிடம் நேரில் கொடுத்தும்,  கடந்த தேர்தலில் கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் - திமுக மீதான உள்நோக்கத்துடன் ஐ.டி. ரெயிடு நடக்கிறது.தோல்வி பயத்தில் பாஜக நடத்தும் ரெய்டு போன்ற முறைதவறிய நடவடிக்கைகளால் திமுகவுக்கு மக்கள் ஆதரவு மேலும் பெருகும். - - திமுக அமைப்பு செயலாளர் @RSBharathiDMK  MP அவர்கள் கண்டனம்.

தேர்தல் ஆணையத்திடம் தற்போது எல்லா அதிகாரமும் இருக்கும்போது, வருமான வரித்துறை தன்னிச்சையாக சோதனை நடத்தமுடியாது; அதையும் மீறி பாஜக அரசின் தூண்டுதலில் தான் சோதனை நடக்கிறது.- @tncpim  மூத்த தலைவர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் குற்றச்சாட்டு.

#ITRaids:பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய வருமானவரி சோதனைகளால் திமுக கூட்டணியைப் பணிய வைத்திட முடியாது.  பாஜக மற்றும் அதிமுக அரசுகளின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. - @Thol. Thirumavalavan, VCK

திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்கவே ஐ.டி. சோதனை நடத்தப்படுகிறது;  அரசியல் ஆதாயம் பெறலாம் என்ற குறுகிய நோக்கத்துடன் வருமான வரித்துறையை பாஜக - அதிமுக அரசுகள் தவறாக பயன்படுத்துகின்றன. -இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. முத்தரசன் அவர்கள் குற்றச்சாட்டு.

வருமான வரித் துறையை ஏவிவிடும் நடவடிக்கைகள் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு உரம் போடுவதாகுமே தவிர, அவர்களது வெற்றியை ஒருபோதும் தடுக்காது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியின் தோல்வி பயத்தின் உச்சம்தான் இது!  இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்! - DK President Asiriyar K.Veeramani

No comments

Thank you for your comments