Breaking News

முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை- முக்கிய அறிவிப்பு வெளியாகும்.... எகிறும் எதிர்பார்ப்பு

சென்னை:

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. நாட்டில் கொரோனாவின் முதல் அலையைவிட 2-வது அலை மிகவும் வீரியமாக தாக்கி வருவது மத்திய, மாநில அரசுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்த தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.   


இதேபோல, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் 10ம் தேதி  முதல் அமலுக்கு வந்துள்ளது. மறு  உத்தரவு  வரும்  வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, கொரோனா தொற்று பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய தற்போதைய ஊரடங்கு பலனளிக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு ஏப்ரல் 14 முதல் - ஏப்ரல்16ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.   இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 

இந்த ஆலோசனைக்குப் பிறகு ஒரு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Thank you for your comments