Breaking News

ஏழைகளுக்கு தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யவில்லை!

புதுடெல்லி, ஏப்.21-

மத்திய அரசு தடுப்பூசி மருந்து கொள்கை பாரபட்சமானது. ஏழை எளிய மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து கிடைப்பதை மத்திய அரசின் புதிய கொள்கை உறுதி செய்யவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.


45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மருந்து இலவசமாக மத்திய அரசு வழங்கியது ஆனால் இப்பொழுது 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு குழந்தை வைரஸ் தடுப்பூசி மருந்து இலவசமாக வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு திங்கட்கிழமை இரவு தெளிவு செய்துவிட்டது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து கிடைக்கும் என்பதற்கு எந்த உறுதியும் மத்திய அரசு வழங்கவில்லை.

மே மாதம் முதல் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி மருந்து வழங்கப்படும். ஆனால் அதற்கு மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று திங்கட்கிழமை இரவு நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசு முடிவு செய்து அறிவித்தது. கடந்த 15 நாட்களில் இந்தியாவில் 25 லட்சம் பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது கட்டுப்பாடில்லாமல் பரவி வருவதால் எல்லோருக்கும் தடுப்பூசி மருந்து வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தின. தடுப்பூசி தயாரிக்கும் மருந்து கம்பெனிகள் தாங்கள் தயாரிக்கும் தடுப்பூசி மருந்து 50 சதவீதத்திற்கு முன்கூட்டியே நிலையை அறிவித்துவிட்டு மாநில அரசுகளுக்கும் மீதி மருந்து சந்தைக்கு விற்க அனுமதிக்கப்படுவதாக மத்திய அரசு திங்களன்று இரவு அறிவித்தது குறிப்பிடத்தகுந்தது.

No comments

Thank you for your comments