திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோட்டில் சூறாவளி பிரச்சாரம்-திமுக வேட்பாளர்கள் ஒரு கண்ணோட்டம்
ஈரோடு, மார்ச் 26-
திமுக தலைவர் மு க ஸ்டாலின் 10 நாட்கள் பிரச்சார பயணம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை 4.30 மணிக்கு சித்தோடு நால்ரோடு பகுதியில், ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி தொகுதிகளின் வேட்பாளர்களுக்காக மக்களின் ஆதரவை திரட்டுகிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தமிழகத்தில் ஐம்முனை போட்டி நடைபெறுகிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது..திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள்...
என்.எஸ்.முத்துசாமி, ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு சிக்காய் நாயக்கர் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தவர். கல்லூரி காலங்களில் இரண்டு முறை கல்லுரி மாணவர் சங்க தலைவராக மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாம் முறை வாய்ப்பு தன்னை தேடி வரும் போது அதை விட்டு கொடுத்து மாணவர்கள் மத்தியில் தன்னை மாணவர்களுக்கான தலைவராக நிலைநிறுத்தி கொண்டார். பின்னர் கல்லூரி படிப்பு முடித்த பின்னர் தொழில் துறையில் தடம் பதிக்க தொடங்கினர். அதில் அவர் தேர்ந்தெடுத்த தொழில் பஸ் போக்குவரத்து துறை NSM என்ற பெயரில் 3 பேருந்துகளை முதலில் ஈரோடு நகர்களில் இயக்கத் தொடங்கினார்.
1977ல் தனது 27 வயதில் முதல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு 1980, 1984 ஆகிய தேர்தல்களில் ஒருங்கிணைந்த ஈரோடு சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1980-1988 ஆகிய காலகட்டங்களில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், 1991 ல் பாவனை தொகுதியில் வெற்றி பெற்று 1991-1996 வரை உள்ள காலகட்டங்களில் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.
இவர் அமைச்சராக இருந்த காலகட்டங்களில் ஒருங்கிணைத்த ஈரோடு மாவட்ட மற்றும் தமிழக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்த அமைச்சர்களில் முதன்மையானவர் முத்துசாமி ஆவார். இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில்
ஈரோடு மாவட்டம் அபரிமித வளர்ச்சி அடைந்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.
முத்துசாமி நிறைவேற்றிய திட்டங்கள்
இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு பெரியார் மாவட்டம் உருவானது.
1977&ல் முதல் முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற போது குடிசை மாற்று வாரியத்தின் மூலம் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேல் மாடி வீடுகள் கட்டி கொடுத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது உள்ள இடத்தில் அமைவதற்கும் சிறப்பாக கட்டிடம் உருவாக காரணமாக அமைந்தவர். புதிய நீதிமன்ற வளாகம் கட்டிடம் கட்டியது. 1980ல் போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பில் செயல்பட்டார். அப்போது போக்குவரத்து கழகத்தில் வெறும் 2000ம் ஆக இருந்த பேருந்துகளை 8 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பிறகு 12,800 பேருந்துகளை கொண்ட பெரும் நிறுவனமாக மாற்றினார். ஈரோட்டில் உள்ள பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி, நவீன மயமாக்கி, மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைத்து பெருமை படுத்தியவர்.
சித்தோட்டில் IRTT பொறியியல் கல்லூரி கொண்டு வந்தது. பெருந்துறையில் மருத்துவ கல்லூரி கொண்டு வந்தது. தமிழகம் முழுவதும் மருந்து பற்றாக்குறையை போக்கியவர். இவரின் காலகட்டத்தில் போக்குவரத்து துறை பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளது. ஈரோடு & பவானி இணைக்கும் புதிய பாலம் அமைத்தது.
சிறிய அளவில் மழை பெய்தாலே தண்ணீர் தேங்கும் மணிக்கூண்டு மார்க்கெட் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்து சீற்படுத்தியது போன்ற பல திட்டங்களை ஈரோடு மக்களுக்காக செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா உதவிகள்: கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்த நேரத்தில் மக்களோடு மக்களாக மக்கள் பணி செய்தவர். முதற்கட்டமாக சுமார் 2 லட்சம் குடும்பங்களுக்கு முகக்கவசம் மற்றும் கபச குடிநீர் வழங்கி மக்களுக்கு துணை நின்றவர்.
சுமார் 7 லட்சம் மக்களுக்கு அரிசி, பருப்பு , முட்டை,உள்ளிட்ட பொருட்கள் வழங்கி மக்களுக்கு துணை நின்றவர். பேரிடர் காலத்தில் கடினமான நேரத்திலும் வேலை செய்து வந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தொடர்ந்து 100 நாட்கள் நேரில் சென்று உணவளித்து அவர்களுக்கு துணை நின்றார். பேரிடர் காலத்தில் கதாநாயகராக விளங்கிய தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி அவர்களது குடும்பங்களுக்கு துணை நின்றவர்.
கொரோனா காலத்தில் மக்களுக்கு துணை நின்று அரசு செய்ய தவறியதை, தன்னுடைய சொந்த நிதியை கொண்டு மக்களுக்கு உதவி செய்ததால், இவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்து உள்ளது தமிழக அரசின் ஈரோடு மாவட்ட காவல்துறை. இவர் தற்போது ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்
திருமகன் ஈவெரா, ஈரோடு கிழக்கு தொகுதி
திருமகன் ஈவெரா அவர்கள் பூர்வீகம் ஈரோடு நகரை சேர்ந்தவர் தந்தை பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமி அவருடைய மகன் ஈ வி கே சம்பத் அவருடைய புதல்வன் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டியின் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் இவரது மகன் திருமகன் ஈவெரா ஆவார் இவருக்கு வயது 45 இவரது இவர் பி ஏ பொருளாதாரம் படித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸில் 2000 2015இல் மாநில பொதுக்குழு
உறுப்பினராகவும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டியில் 2005 முதல் 2010 வரை பொதுச் செயலாளராகவும் 2016 முதல் இன்று வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக 2021ல் பதவி வகிக்கிறார்.!
இவர் தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
கே சி பாலு (பெருந்துறை தொகுதி)
சென்னிமலை குமரப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து பெங்களூர் தயானந்த சாகர் பொறியியல் கல்லூரியில் ஈசிஈ படித்தவர். கொங்கு பொறியியல் கல்லூரியில்
விரிவுரையாளராக 1986 முதல் 1991 வரை பணியாற்றினார். அதன்பிறகு மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுக்கத் தொடங்கினார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிறுவனர் ஈஸ்வரன்
அறிமுகத்திற்கு பின் அக்கட்சியில் இணைந்து பணியாற்றத் துவங்கினார். தற்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
கொங்கு மண்டலத்தில் கே கே சி பாலு முன்னெடுத்த போராட்டங்கள்... உயர்மின்னழுத்த கோபுரத்திற்கு எதிர்ப்பு, சிப்காட் தொழிற்சாலை பிரச்சினை, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி போராட்டம், கீழ் பவானி திட்ட கால்வாய், வேளாண் நிலங்களை
அழிக்கும் மயில் பிரச்சனை, அத்திக்கடவு அவினாசி திட்டம், கொக்கக் கோலா கம்பெனிக்கு எதிர்ப்பு போன்ற பல பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். மேலும் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கொங்குநாடு
மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றவர். 2011 மற்றும் 2016 ஆம் வருடங்களில் பெருந்துறை தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு உள்ளார்.
தற்போது 2021ல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக பெருந்துறை தொகுதியில் போட்டியிடுகிறார்.
கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள்
மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். மஞ்சள் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு ஆலைகளை உருவாக்க வேண்டும். மஞ்சள் சேமிப்புக்கு குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும்.
முழுமையாக நிறைவேற்றப்படாத நிறைவு பெறாத சுற்றுவட்ட சாலைப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் போன்றவை வாக்காளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக்கப்பட வேண்டும். சாய, தோல் கழிவு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஈரோடு&சத்தி சாலையில் சித்தோடு முதல் ஈரோடு பேருந்து நிலையம் வரையிலான சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
விசைத்தறி தொழிலின் முக்கிய பிரச்னையான நூல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் போன்றவை இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



No comments
Thank you for your comments